உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      அரசியல்
Uttav Thackeray 2020 01 17

சிவாஜிபார்க்கில் நடந்த உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவுக்கு ரூ.2 கோடியே 79 லட்சம் செலவானதாகவும், இதில் பூக்கள் மட்டும் ரூ.3 லட்சத்துக்கு வாங்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிராவில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்வர் பதவி பிரச்சினையில் பாரதீய ஜனதாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு சிவசேனா கொள்கையில் முரண்பட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைத்தது. இந்த புதிய அரசு கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி பதவி ஏற்றது. தாதர் சிவாஜிபார்க்கில் நடந்த பிரமாண்ட விழாவில் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்த நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கான செலவீனம் குறித்து உஸ்மனாபாத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் நிகில் சம்பத்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு இருந்தார். இதற்கு அவருக்கு அளிக்கப்பட்டு உள்ள பதிலில், முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு விவரமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், சிவாஜிபார்க்கில் நடந்த உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவுக்கு ரூ. 2 கோடியே 79 லட்சம் செலவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பூக்கள் மட்டும் ரூ.3 லட்சத்துக்கு வாங்கப்பட்டதாக கூறப்பட்டு இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பாரதீய ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்பின் போது ரூ. 98 லட்சத்து 37 ஆயிரம் செலவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து