தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      தமிழகம்
Rain chance 2020 01 20

சென்னை : மாலத்தீவு அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

குமரிக் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருகிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 2 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை ஆகிய இடங்களில் தலா ஒரு செமீ மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை அளவுகளின்படி மலைப் பகுதிகளான கொடைக்கானலில் 10.2 டிகிரி, குன்னூரில் 12 டிகிரி, வால்பாறையில் 13 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. நிலப் பகுதிகளான நாமக்கல்லில் 19 டிகிரி, தருமபுரியில் 20 டிகிரி, தஞ்சாவூரில் 20.8 டிகிரி, கரூர் பரமத்தியில் 21 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து