ஆஸி. ஓபன்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் - டிமிட்ரோவ் அதிர்ச்சி தோல்வி

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      விளையாட்டு
Djokovic progress 2020 01 22

மெல்போர்ன்  : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் டிமிட்ரோவ் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் 2-ம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்றில் ஜப்பானை சேர்ந்த இடோவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-1, 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 18-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் தரநிலை பெறாத அமெரிக்காவின் டோமி பால்-ஐ எதிர்கொண்டார். ஐந்து செட் வரை சென்ற இந்த ஆட்டத்தில் டிமிட்ரோவ் 4-6, 6(6)-7(8), 6-3, 7(7)-6(3), 6(3)-7(10) எனத் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் கனடாவைச் சேர்ந்த மிலோஸ் ரயோனிக் சிலி நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் காரின்-ஐ எதிர்கொண்டார். இதில் ரயோனிக் 6-3, 6-4, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.8-ம் நிலை வீரரான மட்டேயோ பெர்ரேட்டினி அமெரிக்காவின் டென்னிஸ் சன்ட்கிரேனை எதிர்கொண்டார். இதில் தரநிலை பெறாத சன்ட்கிரேன் சிறப்பாக விளையாடினார். ஐந்து செட் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் பெர்ரேட்டினி 6(7)-7(9), 4-6, 6-4, 6-2, 5-7 எனத் தோல்வியடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து