124-வது பிறந்த நாள்: சென்னையில் நேதாஜியின் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      தமிழகம்
Ministers homage Netaji s portrait  2020 01 23

சென்னை : நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அவர்களுடைய பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினமான ஜனவரி 23-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், பா. பென்ஜமின், க. பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் பா. வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.  

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர்  மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ. சங்கர், கூடுதல் இயக்குநர்(மக்கள் தொடர்பு) உல. இரவீந்திரன், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து