பெரியார் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி: ஐகோர்ட்

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020      தமிழகம்
Rajini-Kanth 2020 01 24

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பியதாக ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 14-ம் தேதி சென்னையில் நடந்த ஒரு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி குறித்து பேசியிருந்தார். பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியதற்கு  எதிராக அவர் மீது தி.க. சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டன. 

சென்னை திருவல்லிக்கேணி மற்றும் கோவை காட்டூர் காவல் நிலையங்களில் கொடுத்த புகார் மீது வழக்கு பதியக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு ஐகோர்ட் நீதிபதி ராஜமாணிக்கம் அமர்வு முன்று நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்குள் முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்..? என நீதிபதி கேள்வி எழுப்பினார். புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் நீதிமன்றத்தை மனுதாரர்கள் அணுகி இருக்க வேண்டும். இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடபட்டதே தவறு என்றும் நீதிபதி கூறினர். இதனையடுத்து இந்த மனுக்கள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது. தந்தை பெரியாரின் சீர்திருத்த கொள்கைகள் மிக முக்கியமானவை; பெரியார் மிகப்பெரிய தலைவர்; அவர்களின் கொள்கைகள் மறுக்க முடியாது; சட்ட விதிகளுக்கு உட்பட்டே நீதிமன்றம் செயல்பட முடியும் எனவும் நீதிபதி ராஜமாணிக்கம் கருத்து தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து