சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தாலும் எந்த கவலையும் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      தமிழகம்
Minister Pandiyarajan 2020 01 25

Source: provided

சென்னை : சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் எந்தக்கவலையும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.  

சென்னை திருவேற்காட்டில் அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் எந்தக் கவலையும் இல்லை. அ.தி.மு.க.வில் தலைவர் பதவி எதுவும் காலியாக இல்லை. தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் சட்டரீதியாக அணுகப்படும். சசிகலா வெளியே வந்தால் மகிழ்ச்சி என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து