முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

71-வது குடியரசு தின விழா: டெல்லியில் ஜனாதிபதி தேசியக்கொடியேற்றினார் - ராஜபாதையில் கோலாகல அணிவகுப்பு மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நாட்டின் 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 71-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் மக்களால் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த குடியரசு தின நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சனாரோ வந்திருந்தார். ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சனாரோ ஆகியோர் காரில் ராஜபாதைக்கு வந்து சேர்ந்தவுடன் அவர்களை பிரதமர் மோடி, முப்படைகளின் தளபதி, தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் ராஜபாதையில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்று வைத்து மரியாதை செலுத்தினார். 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு, தேசியகீதம் இசைக்கப்பட்டது. அதன்பின் ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு தொடங்கியது.

முன்னதாக பிரதமர் மோடி டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். வழக்கமாக இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி முதல் முறையாக போர் நினைவுச் சின்னத்துக்குச் சென்றார்.

ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.  இதனிடையே ராஜபாதையில் ராணுவத்தின் எம்.ஐ.-17 வி-5 ஹெலிகாப்டர்கள் பறந்து அனைவரின் மீது மலர்கள் தூவி மகிழ்ச்சிப்படுத்தின. அணிவகுப்பில் எதிரி செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் சக்தி ஏவுகணை, ராணுவ போர் டாங்கிகல் பீஷ்மா, சின்னூக் ஹெலிகாப்டர்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. துணை ராணுவப்படையின் மகளிர் பிரிவு, பாரசூட் ரெஜிமன்ட் ஆகியவற்றின் அணிவகுப்பு நடந்தன. குடியரசு தின அணிவகுப்பில் முதல்முறையாக தனுஷ் கன் சிஸ்டம் பங்கேற்றது. இதில் கேப்டன் மிர்காங்க் பரத்வாஜ் இதற்குத் தலைமை ஏற்று வந்திருந்தார். இந்த தனுஷ் ஆயுதம் அதிகபட்சமாக 36.5 கீமி. தொலைவில் உள்ளதைத் தாக்கும் தன்மை பெற்றதாகும். விமானப்படையின் அலங்கார ஊர்தியில் ரபேல் போர் விமானம், தேஜாஸ் போர்விமானம், அஸ்த்ரா ஏவுகணை உள்ளிட்டவற்றின் மாதிரிகள் இடம்பெற்றன. எதிரி நாட்டுச் செயற்கைக்கோள்களை அழிக்கவல்ல ஏசாட் ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் காட்சிப்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து