முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈக்வடார் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொலை சம்பவங்கள்..!

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2025      உலகம்
Murder 2023-07-06

பார்சிலோனா, ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

ஈக்வடாரில் இருக்கும் பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் டிஃபென்டர் மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் (33 வயது) கடை வீதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதே இடத்தில் உயிரிழந்திருக்கும் அடையாளம் காணாத மற்றுமொரு உடலைக் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் சர்வதேச அளவில் பார்சிலோனா டி குவாயாகில் என்று அழைக்கப்படும் பார்சிலோனா ஸ்போர்ட்டிங் கிளப்பில் டிஃபெண்டராக இருக்கிறார். இவர் தனது கால்பந்து பயணத்தை இன்டிபென்டியென்ட் டெல் வாலே கிளப்பில் (2010- 2015) தொடங்கினார். அடுத்து 2016- 2025 வரை பார்சிலோனா ஸ்போர்ட்டிங் கிளப்பில் ஒப்பந்தம் ஆனார். இதற்கிடையில் லோன் அடிப்படையில் ப்ளூமினென்ஸ் எஃப்சி மற்றும் கிளப் டிபார்டிவோவிலும் விளையாடியுள்ளார்.

இவரது கொலைக்கு கிளப் அணியினரும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து வருத்தத்தை பதிவு செய்துள்ளார்கள். காவல்துறையினர் இந்தக் கொலை குறித்து ஏதும் தகவலைக் கூறாமல் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளார். ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டில் 7,063ஆக இருந்த இதன் எண்ணிக்கை 2023-இல் 8,248-ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து