சீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு - மத்திய வெளியுறவு மந்திரி தகவல்

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2020      இந்தியா
Foreign Minister Information 2020 01 27

புதுடெல்லி : சீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை மற்றும் நல்வாழ்வு குறித்து தலைநகர் பீஜிங்கில் உள்ள நமது தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

சீனா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கு வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை குறித்து கவலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்களின் நல்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அதன்படி மத்திய அரசும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘சீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை மற்றும் நல்வாழ்வு குறித்து தலைநகர் பீஜிங்கில் உள்ள நமது தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதில் மேலும் தகவல்களுக்கு பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் டுவிட்டர் தகவல்களை பின்தொடருங்கள்’ என குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல ஹுபெய் மாகாணத்தின் உகான் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இந்தியர்கள் குறிப்பாக மாணவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறியுள்ள பீஜிங் இந்திய தூதரகம், இது தொடர்பாக சீன அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து