முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் இன்று முதல் 2 நாட்கள் வங்கி ஸ்டிரைக்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நாடு முழுவதும் இன்று முதல் 2 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம் செய்கின்றன. வெள்ளி, சனி நாட்களில் வேலைநிறுத்தமும், ஞாயிற்றுக் கிழமை வழக்கமான விடுமுறையும் வருவதால் மொத்தம் 3 நாட்கள் வங்கி சேவை தொடர்ந்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏ.டி.எம். சேவைகளும் பாதிக்கப்படலாம்.

பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகள் இன்று முதல் 2 நாட்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். முன்னதாக இன்று பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது. பொருளாதார ஆய்வறிக்கையும் சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 - 21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கிகள் தங்களது வேலை நிறுத்தத்தை இன்று தொடங்குகின்றன. முன்னதாக இந்த வேலைநிறுத்தத்தை தவிர்க்க மத்திய நிதி அமைச்சகம் முயன்றது. ஆனால் இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமான முடிவை எட்டவில்லை. இதன் காரணமாக இந்த வேலை நிறுத்தம் துவங்குகிறது. வங்கி நிர்வாகத்திடம் இருந்து எந்தவொரு உறுதிமொழியும் தரப்படாததால் இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வேலை நிறுத்தத்தால் 3 நாட்கள் வங்கி சேவை மற்றும் ஏ.டி.எம். சேவையும் பாதிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து