முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

டோக்கியோ : ஜப்பான் நாட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 218 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைமண்ட் பிரின் சஸ் என்ற சொகுசு கப்பல் ஹாங்காங்கில் இருந்து கடந்த 3-ம் தேதி ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்துக்கு வந்தது.அதில் இருந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கப்பலில் இருந்த 3,711 பயணிகள் மற்றும் ஊழியர்கள் கப்பலில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டது. கப்பலை கடலிலேயே நிறுத்தி பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் சொகுசு கப்பலில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. இதுகுறித்து ஜப்பான் சுகாதாரதுறை அமைச்சர் காட்சூநோபு காதே கூறியதாவது:-

சொகுசு கப்பலில் மேலும் 221 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதில் 43 பேர் பயணிகள், ஒருவர் கப்பல் ஊழியர். அவர்கள் உடனடியாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதவர்களில் முதலில் முதியவர்களை கப்பலில் இருந்து கீழே இறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த பணி நாளை அல்லது அதன் பிறகு தொடங்கப்படும்.கப்பலில் இருந்து கீழே இறக்கப்படுபவர்கள் அரசு அளிக்கும் உறைவிடத்தில் தங்க வைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். ஜப்பான் சொகுசு கப்பலில் 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் 6 பேர் தமிழர்கள். அவர்கள் கப்பலில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து