முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்க கேப்டன் பதவியில் இருந்து டூபிளெசிஸ் திடீர் விலகல்

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

தென் ஆப்பிரிக்கா : தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து அனுபவ வீரர் பா டூபிளெசிஸ் விலகுவதாக நேற்று திடீரென அறிவித்துள்ளார்.  புதிய கேப்டனாக குயின்டன் டீ காக் பொறுப்பேற்க உள்ளார்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் நிலையில் டூபிளெசிஸ் இந்த முடிவை எடுத்துள்ளார். இதுவரை டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 விதங்களில் 112 போட்டிகளுக்கு கேப்டனாக டூபிளெசிஸ் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து பணியாற்றியுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முதல்முறையாக டூப்பிளசிஸ் தென் ஆப்பிரிக்க அணியை வழிநடத்தினார். சமீபத்தில் உலகக்கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்து முதல் சுற்றோடு வெளியேறியது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணியை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில் முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர்களாக, தேர்வாளர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்படி, பேட்டிங் பயிற்சியாளராக ஜாக் காலிஸும், தலைமைப் பயிற்சியாளராக மார்க் பவுச்சரும், தேர்வுக் குழுத் தலைவராக ஸ்மித்தும் நியமிக்கப்பட்டார்கள்.இந்த சூழலில் அடுத்த தலைமுறையினருக்கு அணியில் வழி விடவேண்டும் என்ற நோக்கில் கேப்டன் பதவியை டூபிளெசிஸ் ராஜினாமா செய்துள்ளார்.கேப்டன் பதவியிலிருந்து விலகியது குறித்து டூபிளெசிஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

நான் கேப்டனாக பொறுப்பேற்ற போது, அர்ப்பணிப்புடன் அணியை வழிநடத்தினேன், பேட்டிங் செய்தேன், அனைத்து நடவடிக்கையிலும் ஈடுபட்டேன். அணியில் தலைவர் எனும் முறையில் புதிய தலைவருக்கு வழிவிட வேண்டும், இளம் வீரர்களுக்கு வழிகாட்ட வேண்டும். தென் ஆப்பிரிக்க அணியின் எதிர்கால நலனுக்காக அனைத்துவிதமான போட்டிகளுக்கும் கேப்டன் பதவியிலிருந்து நான் விலகி கொள்கிறேன். இது மிகவும் கடினமான முடிவுதான் என்றாலும், அடுத்து வரும் கேப்டன் குயின்டன் டீகாக்கிற்கு தேவையான அனைத்து விதமான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவேன். அணியை கட்டமைக்க அணி வீரர்களுடன் சேர்ந்து பணியாற்றுவேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து