ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பரிசோதனை நிறைவு - 454 பேருக்கு பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020      உலகம்
japan ship corono affect rise 2020 02 18

யோகாஹாமா : ஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் பீதி காரணமாக யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டது. கப்பலில் இருந்த சிலருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்தது. அதன் அடிப்படையில் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக நீடித்த இந்த பணி நிறைவடைந்துள்ளது.கப்பலில் 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என மொத்தம் 3,711 பேர் இருந்தனர். இதில் 5 இந்தியர்கள் உள்பட மொத்தம் 454 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து