முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் கொரோனா வைரஸ் பலி 1,860 ஆக உயர்ந்தது

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

பீஜிங் : சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1860 ஆக உயர்ந்துள்ள நிலையில் 11 ஆயிரத்து 947 பேர் மோசமான நிலையில் இருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

உலக வல்லரசு நாடான சீனாவை கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. அங்கு இந்த வைரசுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடி உள்ளது. வைரசை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது.  ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 98 பேர் உயிரிழந்தனர்.அதிகபட்சமாக ஹுபெய் மாகாணத்தில் 98 பேர் உயிரிழந்தனர். ஹெனன் மாகாணத்தில் 3 பேரும், ஹுனேன், ஹெபெய் மாகாணத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். இதனால் கொரோனா வைரசின் பலி 1,860 ஆக உயர்ந்தது.ஒட்டு மொத்தமாக 72 ஆயிரத்து 436 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நேற்று புதிதாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிகிச்சை பெறுபவர்களில் 1,097 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.11 ஆயிரத்து 947 பேர் மோசமான நிலையிலேயே இருக்கிறார்கள் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக ஹுபெய் மாகாணத்தில் 59 ஆயிரத்து 989 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.சீனா முழுவதும் வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 ஆயிரத்து 552 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் நெருங்கிய தொடர்பில் இருந்த 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தீவிரமாக மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய உகான் நகரம் உள்ள ஹுபெய் மாகாணத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். அங்கு பலர் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவ குழுவினர் முகாமிட்டு வருகிறார்கள். அந்த மாகாணத்தை விட்டு மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆஸ்பத்திரிகள் உருவாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் 6 ஆயிரத்து 960 படுக்கைகள் கொண்ட 9 தற்காலிக மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. ஹுபெய் மாகாணத்துக்கு 217 மருத்துவக்குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 25 ஆயிரத்து 633 மருத்துவ ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து