முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியீடு: கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கான அரசாணையும் ரத்து

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக சட்டசபையில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாநிலத்தின் காவிரி ஆற்றுப்படுகை மண்டலத்தில் உள்ள வேளாண் நிலங்களை பாதுகாப்பதற்கான ஒரு சட்ட முன்வடிவினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார். பின்னர் இந்த சட்ட முன்வடிவு ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த நிலையில் இது  சட்டமாக  அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சட்ட முன்வடிவில் கூறியிருப்பதாவது:-

இந்த சட்டம் 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்தும் சட்டம் என வழங்கப் பெறும். இந்த சட்டத்தின் படி, துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலை. ஒருங்கிணைந்த எக்கு ஆலை அல்லது இரும்பு உருக்காலை, செம்பு அலுமினிய உருக்காலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் மற்றும் பிற உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணெயம் மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் உள்ளடங்கலான இயற்கை எரிவாயு ஆய்வு துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது.

இந்தத் தடையானது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பக்குடி வட்டாரங்களுக்கு இந்தத் தடை பொருந்தும். எந்தவொரு நபரும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்த ஒரு புதிய திட்டத்தையோ அல்லது புதிய செயற்பாட்டையோ மேற்கொள்ளுதல் ஆகாது.

அதேசமயம் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை பாதித்தலாகாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள துறைமுகம், குழாய் இணைப்பு, சாலை, தொலை தொடர்புகள், மின்சாரம், நீர் விநியோகம் மற்றும் பிற பயன்பாடுகள் போன்ற உட்கட்டமைப்பு ஆகியவற்றை பாதித்தலாகாது.இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற்றுவதற்கு பின்வருமாறு உறுப்பினர்களை உள்ளடக்கிய தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைப்பு என்ற பெயரில் ஓர் அதிகார அமைப்பு உருவாக்கப் படுகிறது. முதலமைச்சரை தலைவராகக் கொண்டு, துணை முதலமைச்சர், நிதித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், வேளாண்மை துறை அமைச்சர் உள்ளிட்ட 24 பேரை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அதிகார அமைப்பு செயல்படும்.

இது தனி அதிகார அமைப்பாகும். இந்த அமைப்புக்கு உதவ மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் உள்ளிட்ட அடங்கிய மாவட்ட அளவிலான 13 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதில், மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்பட்ட 2 விவசாயிகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்களை தொடங்கினால் 5 ஆண்டுகள் மிகாமல் ஆறு மாதங்களுக்கு குறையாத சிறை தண்டனை விதிக்கப்படும். 50 லட்சம் அபராதத் தொகை விதிக்கப்படும். ஆனால், ரூ.10 லட்சத்துக்கு குறையாத மற்றும் தொடர்ச்சியான மீறலை பொறுத்த வகையில் கூடுதல் அபாரதத்துடன், அத்தகைய மீறலில் ஒவ்வொரு நாளும் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், தண்டனையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த சட்டமுன்வடிவில் கூறப்பட்டுள்ளது. 

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, அவற்றில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருகள் முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals and Petrochemicals Investment Region -PCPIR) அமைப்பதற்கு 2017ம் ஆண்டு ஜூலை 19 இல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. இதனிடையே காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட முன்வடிவு தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில வட்டாரங்கள் மட்டுமே வேளாண் மண்டலம் என்ற வரையறையின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து