நீடித்த நிலைத்த சுகாதார கிராமமாக மண்டபம் ஒன்றியம் குஞ்சார்வலசை கிராமம் அறிவிப்பு.

15 madapam news

மண்டபம்,- நீடித்த நிலைத்த சுகாதார கிராமமாக மண்டபம் ஒன்றியம் குஞ்சார்வலசை கிராமம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    என்.எஸ்.இ.பவுன்டேசன் நிதி உதவியுடன் கிராமாலயா தொண்டுநிறுவனம் மூலம் செயல்பட்டு குடிநீர் சுகாதார நலக்குழு ஊராட்சி மன்ற தலைவரின் தலைமையில் வேதாளை ஊராட்சிக்குட்பட்ட குஞ்சார் வலசை கிராமம் நீடித்த நிலைத்த சுகாதார கிராமமாக அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் செய்யது அல்லாபிச்சை தலைமை வகித்தார். துணை தலைவர் சந்திரகலா, கிராமத் தலைவர் பொன்னுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கணேசன், ஜெயிரகாஷ், ஊராட்சி மன்ற செயலாளர் ராமநாதன், தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் மண்டபம் ஒன்றியம் முருகேசன், பள்ளி தலைமை ஆசிரியை லதா, வேதாளை ஊராட்சியின் தூய்மைத் தூதுவர் செல்வராணி, கிராமாலயா திட்ட ஒருங்கிணைப்பாளர் மண்டபம் ஒன்றியம் பவுல் அந்தோணிராஜ், கிராமாலயா திட்ட ஒருங்கிணைப்பாளர் இராமநாதபுரம் ஒன்றியம் பாப்பு,கிராமாலயா தணிக்கை அலுவலர்கள் ஜம்புகேசவன், கார்த்திகேயன், வேதாளை குடிநீர் சுகாதார நலக்குழு உறுப்பினர்கள், மற்றும் இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் ஜம்புகேசவன், மற்றும் கிராமாலயா பணியாளர்கள் கலந்துக்கொண்டார்கள். விழாவில் பள்ளி மாணவர்கள் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பாடல் பாடினர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து