கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.80 லட்சம் வழங்கிய ரோகித் சர்மா

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020      விளையாட்டு
SPORTS-3 2020 03 31

Source: provided

மும்பை : கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா 80 லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கி உள்ளார். 

கொரோனா வைரஸ் வேகமாக பரவி கடும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி வழங்கலாம் எனவும், அதை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கலாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதேபோல் மாநில அரசுகள், அந்தந்த மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த வேண்டுகோளை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரோகித் சர்மா, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 80 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். பிரதமரின் நிவாரண நிதிக்கு 45 லட்சம் ரூபாயும், மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், Feeding India மற்றும் Welfare Of Stray Dogs ஆகிய அமைப்புகளுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்கியிருப்பதாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து