ஏப். 1-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க கேரள மருத்துவர்கள் முடிவு

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020      இந்தியா
Karala 2020 03 31

Source: provided

திருவனந்தபுரம் : ஏப்ரல் 1-ம் தேதி(இன்று) புதன்கிழமையை கருப்பு தினமாக அனுசரிக்க கேரள மாநில அரசு மருத்துவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

மதுவுக்கு அடிமையானவர்கள் என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளித்தால், அவர்களுக்கு மது வழங்குமாறு கேரள மாநில அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை அனைத்து மருத்துவர்களும் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கேரளத்தில் மதுவுக்கு அடிமையானவா்களுக்கு மருத்துவா்களின் பரிந்துரையின்பேரில் மது வழங்கும் அரசின் திட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.கேரளத்தில் மதுக்கடைகள், மதுபான பாா்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மதுவுக்கு அடிமையான சிலர் தற்கொலை செய்து கொண்டனா்.

இதையடுத்து, மதுவுக்கு அடிமையானவா்களுக்கு மருத்துவா்களின் பரிந்துரையின்பேரில் மது வழங்கலாம் என்று முதல்வா் பினராய் விஜயன் தெரிவித்திருந்தாா். மதுவுக்கு அடிமையானவா்களுக்கு மருத்துவா்கள் பரிந்துரையின்பேரில் மது வழங்குவது என்பது அறிவியல்பூா்வமான நடவடிக்கை அல்ல என்று கேரள அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட மருத்துவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்த முடிவைக் கண்டித்து இன்று புதன்கிழமை கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என் கேரள அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம், இதுபோல யாருக்கும் மது வழங்குமாறு பரிந்துரைக்க முடியாது என்றும் மருத்துவர்கள் சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து