முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணை தொகை செலுத்த கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பயிர்க்கடன், சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணங்களை ஜூன் 30-ம்  தேதி வரை செலுத்தலாம்.

இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் கலந்தாய்வு செய்த பின்னர்,  உயரதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி, கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றேன்.

* கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணைத் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 -வரை) நீட்டிக்கப்படுகிறது.
* வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
* தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
* அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கடனுதவிகளுக்கான தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
* தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளைச் செலுத்தமூன்று மாத கால அவகாசம் (30.6.2020 வரை) வழங்கப்படுகிறது.
* சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான கொரோனா நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் என்ற சிறப்பு கடனுதவித் திட்டத்தினி கீழ் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கடனுதவி பெற்றுள்ள 2,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர மூலதனத் தேவைகளுக்காக செயல்படுத்தப்படும்.
* சிப்காட் நிறுவனத்திடம் மென்கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
* சிப்காட் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் பராமரிப்புக் கட்டணம் செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.

லைசென்ஸ் பெறவும் அவகாசம்

* மோட்டார் வாகனச் சட்டப்படி உரிமங்கள் மற்றும் வாகன தகுதிச் சான்றுகள் புதுப்பிக்கப்பட வேண்டிய கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
* எடைகள் மற்றும் அளவைகள் சட்டம், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், உள்ளாட்சி அமைப்புகளினால் அமல்படுத்தப்படும் கேடும் குற்றமும் பயக்கும் தொழிற்சட்டம் ஆகியவற்றின் கீழ் புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களின் கால அவகாசம் 3  மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

சொத்துவரி செலுத்த அவகாசம்

* உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கான கால அவகாசம் 3மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
* தற்போது உள்ள சூழ்நிலையில், வாடகை வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்துவதில் உள்ள சிரமங்களை அரசின் கவனத்திற்கு  கொண்டு வந்துள்ளனர். எனவே, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகைத் தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வீட்டு உரிமையாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வீட்டிலேயே இருப்பது அவசியம்

தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்காக 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதே சமயத்தில், இந்நோய்த் தொற்று இரண்டாம் கட்டத்தில் இருப்பதாகவும், அது மூன்றாம் கட்டத்திற்குப் பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து, தங்கள் வீட்டிலேயே இருப்பது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  எனவே, அத்தியாவசியப் பொருட்களை வாங்க அரசு பிறப்பித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும், எந்தவிதமான வதந்திகளை நீங்கள் நம்ப வேண்டாம். வதந்திகள் பரப்புவோர் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, உங்களின் நன்மைக்காகவும், உங்கள் குடும்பத்தின் நன்மைக்காகவும், நம் நாட்டின் நன்மைக்காகவும், பொதுமக்கள் அனைவரும்அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து