Idhayam Matrimony

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

திங்கட்கிழமை, 14 ஜூலை 2025      ஆன்மிகம்
Thiruparanguntam 2025-07-14

Source: provided

மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர் 

முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதனை முன்னிட்டு ரூ.2 கோடியே 44 லட்சம் மதிப்பில் ராஜகோபுரத்தில் 7 தங்க கலசம், அம்பாள் சன்னதியில் 1 தங்கக் கலசம், கணபதி கோவில் 1 கலசம் உள்பட 9 கலசங்கள் உள்பட 20 திருப்பணிகள் நடந்துள்ளன. உபயதாரர் மூலம் ரூ.70 லட்சத்தில் ராஜகோபுர திருப்பணிகள் நடந்துள்ளன.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நேற்று முன்தினம் இரவு (ஜூலை 13) 10 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து மீனாட்சி, சுந்தரேசுவரர் பரிவார மூர்த்திகளுடன் புறப்பட்டனர்.  

முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஐந்தாம் நாளான நேற்று (ஜூலை 14) அதிகாலை 3.45 மணிக்கு எட்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காலை 5.31 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜகோபுரம், பரிவார மூர்த்திகள், கோவர்த்தனாம்பிகை, வல்லப கணபதி ஆகிய விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ராஜகோபுரத்தில் உள்ள 7 தங்க கலசம், அம்பாள் சன்னதியில் 1 கலசம், கணபதி கோவில் 1 கலசம் உள்பட 9 கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்குப் பின் 10 ட்ரோன்கள் மூலம் புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

இவ்விழாவில் அமைச்சர் சேகர்பாபு பச்சைக்கொடி அசைக்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி, திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையில் துணை ஆணையர்கள் அனிதா, இனிகோ திவ்யன், வனிதா (போக்குவரத்து) ஆகியோர் மேற்பார்வையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி தலைமையில் கோவில் துணை ஆணையர் சூரியநாராயணன், அறங்காவலர்கள் மணிச்செல்வன், சண்முகசுந்தரம், பொம்மதேவன், ராமையா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து