எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லண்டன் : மகளிர் டி-20 ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 9-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
டி20 தரவரிசை...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீராங்கனைகளுக்கான டி20 தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் 2-ம் இடத்திலும், இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 9-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ்...
அதேசமயம் இங்கிலாந்து வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் ஒரு இடம் பின் தங்கிய 10-ம் இடத்தையும், டேனியல் வையட் ஹாட்ஜ் ஒரு இடம் முன்னேறி 13-வது இடத்தையும், இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 இடங்கள் பின் தங்கி 14-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
தீப்தி சர்மா 3-ம் இடம்...
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் சதியா இக்பால் முதல் இடத்தில் தொடரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் ஒரு இடம் முன்னேறி 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஒரு இடம் பின் தங்கி 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ரேனுகா சிங் சரிவு...
மற்றொரு இந்திய வீராங்கனை ரேனுகா சிங் 5 இடங்கள் பின் தங்கி 11-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், ராதா யாதவ் 3 இடங்கள் முன்னேறி 15-ம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணி அறிமுக வீராங்கனை ஸ்ரீ சாரணி 49 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


