Idhayam Matrimony

காசா: நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு

புதன்கிழமை, 16 ஜூலை 2025      உலகம்
Gaza-2025-07-16

டெல் அவிவ், காசாவில் நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் ஏற்பட்டது. அப்போது 20 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் வழியாக சிலரை மீட்டது. இன்னும் 50 பேர் வரை விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

ஆனால் அவர்களில் பாதிபேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சூழலில், காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

இந்நிலையில், காசா முனை பகுதியில் இஸ்ரேல் ஆதரவு பெற்ற அமெரிக்க தொண்டு நிறுவனம் ஒன்று மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டதில், 20 பேர் அதில் சிக்கி உயிரிழந்தனர். இந்த நெரிசலின்போது ஏற்பட்ட வன்முறையில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.  இதில், கத்தியால் குத்தப்பட்டதில் ஒருவர் பலியானார். இதனால், மொத்தம் 21 பேர் பலியாகி உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து