முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு புள்ளிவிவரங்கள் மறைக்கபடுகின்றன - அமெரிக்கா குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

உளவுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி, கொரோனா வைரஸ் வெடித்ததில் சீன அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் துல்லியத்தன்மை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து,  அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக சீனா கூறுகிறது. கொரோனா உருவான சீனாவில் மொத்தமே 81,000 பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதுவே அமெரிக்காவில் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஒரு லட்சத்திற்கும் மேல், அதே சீனாவின் எல்லைக்குள் இருக்கும் பெய்ஜிங்கில், 2.15 கோடி மக்கள் வசிக்கின்றனர். அங்கு 569 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கையை உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவாக வெளிஉலகுக்கு அறிவிக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது. இதில் குறிப்பாக சீனா பொய்த் தகவல்களையே தந்து உள்ளதாக கூறுகிறார்கள்.

இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அதிபர் டிரம்ப் சீனாவின் கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் துல்லியமானவை என்று எங்களுக்கு எப்படி தெரியும். அவற்றின் எண்ணிக்கை மறைக்கப்பட்டு உள்ளன.சீனாவுடனான உறவு ஒரு நல்ல உறவு என்றும் அவர் ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நெருக்கமாக இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். குடியரசுக் கட்சியின் செனட்டர் பென் சாஸ் சீனாவின் கொரோனா கணக்குகளை  குப்பை பிரச்சாரம் என்று தாக்கினார். சீனாவை விட அமெரிக்காவில் கொரோனா வைரஸ் இறப்புகள் அதிகம் என்ற கூற்று தவறானது எந்தவொரு இரகசிய தகவல்களிலும் கருத்து தெரிவிக்காமல், இது மிகவும் வேதனையானது. சீன கம்யூனிஸ்ட் கட்சி பொய் சொல்கிறது, ஆட்சியைப் பாதுகாக்க கொரோனா வைரஸ் பற்றி தொடர்ந்து பொய் சொல்லும் என்று சாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து