முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம் செய்யப்படவில்லை: ரயில்வே நிர்வாகம் விளக்கம்

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

வரும் 14-ம் தேதிக்குப் பின்னர் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஒருபோதும் நிறுத்தம் செய்யப்படவில்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து ரயில்களில் பயணிப்பதற்கான முன்பதிவு டிக்கெட் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியுள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ரயில்வே நிர்வாகம் இது குறித்து விளக்கமளித்துள்ளது. வரும் 15-ம் தேதிக்குப் பின்னர் ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு டிக்கெட் ஒருபோதும் நிறுத்தம் செய்யப்படவில்லை என்றும் வழக்கம் போல ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து பயணம் செய்ய முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஏப்ரல் 14-ம் தேதி வரை ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் தங்களது டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டிய தேவையில்லை. தானாகவே அவை ரத்தாகி விடும். மேலும், டிக்கெட் கட்டணம் முழுவதுமாக அவர்களது வங்கிக்கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும். நேரடியாக கவுண்டரில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட்டை ரத்து செய்ய ஜூன் 21 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து