எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் தருமாறு பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள, முதல் அமைச்சர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு (பெப்சி அமைப்பு) ரூ.25 லட்சம் என ரூ.1.25 கோடியை நடிகர் அஜித்குமார் நிதியுதவியாக வழங்கியுள்ளார். இதற்கு முன்பு, நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவி தொகையாக ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார். நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி உள்ளனர். சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து ஏற்கனவே பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் உதவி வழங்கி இருக்கிறார்கள். நடிகர் பார்த்திபன் 250 மூடை அரிசி வழங்கி உள்ளார். ஒவ்வொரு மூடையும் 25 கிலோ எடை கொண்டதாகும். நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலா 10 மூடை அரிசி வழங்கி உள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் 150 மூடை அரிசி வழங்கி உள்ளார். திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |