முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு

வியாழக்கிழமை, 9 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநிலங்களுக்கு ரூ.15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒவ்வொரு மாநில வாரியாக ரூ.15,000 கோடியை பிரித்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை, ஆய்வகங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மருத்துவர்களுக்கு எண்-95 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநிலங்களுக்கு ரூ.15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. முன்னதாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி பேசினார். அப்போது, அவர், உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகளின் அறிவுரைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா மருத்துவ வசதிகளை மேம்படுத்த 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சுகாதாரப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கொரோனா அறிகுறி வெளிப்படுத்துவதற்கு சில நாட்கள் பிடிக்கும்.மருத்துவர்களின் அறிவுரைகளின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். இக்கட்டான சூழலில், வலிமை பொறுமை அவசியம். மருத்துவத்துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்போம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அந்த தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே 21,000 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்த நிலையில் தற்போது மேலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவ உபகரணங்களை வாங்குவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவு செய்வது போன்றவை மேற்கொள்ளப்படும். இந்த தொகை மூன்று தவணைகளாக மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து