முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?

வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 12 ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில், ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், வீட்டில் தனிமைப்பட்டு உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு;
தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிவறையுடன் கூடிய காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர் வெளியே எங்கும் செல்லாமல் ஒதுக்கப்பட்ட அறையிலேயே இருக்க வேண்டும். பராமரிப்பு பணி செய்வர் தவறாமல் முகக்சவசமும் கையுறையும் அணிந்திருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. தனிமைப்படுத்தப்பட்டவரின் உடைகள், விரிப்புகளை தனியாக துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.

முகக்கவசம், கையுறை ஆகியவற்றை கழற்றிய பின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் யாரும் தனிமைப்படுத்தப்பட்டவருடன் தொடர்பில் இருக்க கூடாது. தனிமைப்படுத்தப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் 28 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். வீட்டை தினமும் 3 முறையாவது கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவருக்கு சளி, காய்ச்சல் இருந்தால் 104 அல்லது 1800 120 555550-ஐ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து