முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கொரிய தலைவர் கிம் ஆபத்தில் இருக்கலாம்.? அமெரிக்க உளவுத்துறை தகவல்

செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடுமையான ஆபத்தில் இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் தனது தாத்தாவின் பிறந்தநாளைக் கொண்டாடும்  நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதால் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடல்நலம் குறித்த புதிய ஊகங்களுக்கு வழிவகுத்து உள்ளன. அமெரிக்காவின் உளவுத்துறை அறிக்கை வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஒரு அறுவை சிகிச்சைக்குப்பின் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி உள்ளது.
 
வடகொரியாவில் சியோலை தளமாகக் கொண்ட செய்தி இணையதளம் ஒன்று  கிம் ஜாங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொணடதாகவும் இப்போது அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது. இந்த இணையதளம்  தென் கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்துடன் இணைந்த லாப நோக்கற்ற ஏஜென்சிகளின் குழுவின் ஒரு பகுதியாகும், மேலும் தகவல்களுக்காக சியோல் அதிகாரிகளால் அவ்வப்போது தொடர்பு கொள்ளப்படுகிறது. வட கொரியாவின் நிலைமைகள் குறித்த விழிப்புணர்வையும், புரிந்துணர்வையும் வளர்ப்பதன் மூலம் நாட்டைப் பற்றிய துல்லியமான, சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான செய்திகளையும் தகவல்களையும் கொடுத்து வருகிறது.

வட கொரியா தலைவரின் உடல்நலம் நாட்டில் மிகவும்  பாதுகாக்கப்பட்ட ரகசியங்களில் ஒன்றாகும், இது பொதுவாக தலைமைத்துவத்தின் உள் வட்டத்தில் உள்ள ஒரு சிலரால் மட்டுமே அறியப்படுகிறது. கிம் தனது தாத்தா மற்றும் வடகொரிய நிறுவனர் கிம் இல் சுங்கின் பிறந்தநாள் (ஏப்ரல் 15) கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிம் அதிக புகைபிடிப்பவர், சமீபத்திய மாதங்களில் ராணுவ பயிற்சிகளில் தோன்றுவதும், நாட்டின் புகழ்பெற்ற மலை மீது   வெள்ளை குதிரை சவாரி செய்வதும் என நாட்டின் ஊடகங்களில் புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து