முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில், கிணற்றில் 9 புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்கள் கண்டெடுப்பு : 6 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் கிணற்றில் புலம் பெயர் தொழிலாளி குடும்பத்தினர் 9 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் உள்ள கோரே குந்தா என்ற கிராமத்தில், சந்தோஷ் என்பவர் கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் மேற்கு வங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்து வந்தனர். 

இந்த கோணிப்பை தொழிற்சாலையில் தான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மசூத் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கரிமாபாத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஊரடங்கு காரணமாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டதை அடுத்து பொருளாதார நெருக்கடி காரணமாக, மசூத் மற்றும் அவரது குடும்பத்தினரும் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான குடோனில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மசூத் மற்றும் குடும்பத்தினரை காணவில்லை என்று குடோன் உரிமையாளர் சந்தோஷ் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அச்சமயம் தொழிற்சாலை அருகே உள்ள கிணறு ஒன்றில், சிலரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து, கிணற்றில் இருந்து 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் சடலம் மீட்கப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மசூத், அவருடைய மனைவி நிஷா, கணவனை விட்டு பிரிந்து வாழும் மகள் புஸ்ரா, புஸ்ராவின் மூன்று வயது மகன் ஆகியோரின் உடல்களை போலிசார் கைப்பற்றினர்.

இந்த நிலையில், நேற்று மேலும் 5 சடலங்கள் அதே கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மசுத் மகன் சபாக், பீகாரைச் சேர்ந்த தொழிலாளிகள் ஸ்ரீராம் மற்றும் ஷாம், திரிபுராவைச் சேர்ந்த ஷகீல் அகமது ஆகியோரின் உடல்களை அதே கிணற்றிலிருந்து போலீசார் கைப்பற்றினர். கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.  ஒரே கிணற்றில் இருந்து இரண்டு நாட்களில் அடுத்தடுத்து 9 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து