முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.58 கோடியில் 29 பள்ளி கட்டிடங்கள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார் : நாசா செல்லும் நாமக்கல் மாணவிக்கு ரூ. 2 லட்சம்

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் தருமபுரி, அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவண்ணாமலை, தேனி, திருவள்ளூர், திருவாரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 57 கோடியே 53 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 27 பள்ளிக் கட்டிடங்கள், 2  ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கட்டிடங்கள்,  மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். 

அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ, மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள், காலணிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை வழங்குதல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில்,  தருமபுரி  மாவட்டம், தருமபுரி வட்டம், செட்டிக்கரையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கட்டிடம், செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் வட்டம், பவுஞ்சூர் மற்றும் நீலகிரி மாவட்டம், கூடலூர் ஆகிய இடங்களில் 5 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கட்டிடங்கள், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ்,  அரியலூர், கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர்,  திருவண்ணாமலை, தேனி , திருவள்ளூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 22 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 40 கோடியே 11 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகக் கட்டிடங்கள், கழிப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 5 அரசு உயர்நிலைப் பள்ளிகளில்  8 கோடியே 50 லட்சத்து  24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள் என மொத்தம் 57 கோடியே 53 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 27 பள்ளிக் கட்டிடங்கள், 2  ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனக்  கட்டிடங்கள்,  மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கட்டிடம் ஆகியவற்றை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்திய அளவில் இணையம் வாயிலாக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற அறிவியல் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்ற  நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி செல்வி அபிநயா, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லவும், சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க ஏதுவாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உதவித்தொகையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செல்வி அபிநயாவிற்கு வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், பி. தங்கமணி, தலைமைச் செயலாளர் சண்முகம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து