முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி ஓட்டல்கள், மால்களை திறக்கவும் மத்திய அரசு பச்சைக்கொடி

சனிக்கிழமை, 30 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 24-ம் தேதி இரவிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வைரஸ் பரவல் குறையாததால் அதற்கு பின்னும் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து நான்காம் கட்டமாக புதிய தளர்வுகளுடன் மே 31 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறைஅமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதில் வைரஸ் பாதிப்பு பகுதிகளை அடையாளம் கண்டு வரையறை செய்வது, போக்குவரத்தை இயக்குவது போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமே கொடுத்துள்ளது. இந்நிலையில் 4-ம் கட்ட ஊரடங்கு இன்று நிறைவடைகிறது. இந்த நிலையில், 5-ம் கட்டமாக நேற்று மத்திய அரசு அன்லாக் 1. 0 என்ற பெயரில் சில புதிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 

திரையரங்குகள், நீச்சல் குளம் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து சூழலுக்கேற்ப முடிவெடுக்கலாம். மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பது பற்றி ஜூலையில் முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட தளர்வுகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்:

நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நீட்டித்தும், மற்ற பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த ஊரடங்கின் போது அவசர அத்தியவாசிய தேவைகளை தவிர இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது. ஜூன் 8 முதல் ஹோட்டல்கள், ஷாப்பிங்மால்கள் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும். தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும்.கொரோனா தாக்கத்தை பொறுத்து சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்படும். மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் தொடரும். மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.

சினிமா, பொழுதுபோக்கு பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள், மெட்ரோ ரயில்கள், நீச்சல் குளங்கள் ஆகியன திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது. பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம். கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.  அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது. நாடு தழுவிய அளவில் குறிப்பிட்ட வகை பிரிவுகளுக்கு மட்டுமே தடை இருக்கும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வுகளும் கிடையாது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம். பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். மாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து