முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கு விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

மான் கீ பாத் நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:- கொரோனாவுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர். பொதுமுடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கியக் காரணம். இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைத்தான் உலகமே உற்று நோக்கியுள்ளது.

இந்தியா தனது சுய சக்தியில் செயல்படும் போது. பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படும். ஆயுஷ்மான் திட்டத்தால் மக்கள் பயன் அடைந்துள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆயுஷ்மான் பாரத் திட்டம் துவங்கப்பட்டது.

யோகா மூலம் சுவாசப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்கள் முயன்று வருகின்றனர். பிராணயாமம் உள்ளிட்ட சில பயிற்சிகள் நமக்கு மிகச்சிறந்த தீர்வை அளிக்கும். கொரோனா போர்- மக்கள் இயக்கமாக மாறி உள்ளது. கொரோனாவை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் பொருளாதாரத்திலும் கவனம் செலுத்தி வருகிறது.

புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கிராமங்களில் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து விவசாயிகளை காக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெட்டுக்கிளி பிரச்சினை விவசாயிகளை பாதிக்காமல் இருக்க புதிய உத்திகள், முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து