முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவுடன் பேச்சு தொடர்கிறது : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : லடாக் எல்லைப் பிரச்சினை குறித்து சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 1914-ம் ஆண்டில் அன்றைய பிரிட்டிஷ் இந்தியா, சீனா, திபெத் இடையே உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி லடாக், ஜம்மு-காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கடந்த 1949-ம் ஆண்டில் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அப்போது முதல் லடாக் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது, 

லடாக் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பருடன் பேசினேன். இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அவரிடம் தெளிவாக எடுத்துரைத்தேன். அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவை பேணி வருகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ராஜ்யரீதியிலான உறவு நீடிக்கிறது. ஏதாவது பிரச்சினை எழுந்தால் ராணுவ, ராஜ்யரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

கடந்த காலங்களில் பிரச்சினைகள் எழுந்த போது பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட்டது. அந்த அடிப்படையில் லடாக் எல்லை பிரச்சினை குறித்து சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் இந்தியாவின் கவுரவத்துக்கு களங்கம் ஏற்பட அனுமதிக்க மாட்டோம். வலுவான தலைமையின் கீழ் இந்தியா செயல்படுகிறது. இதை மக்கள் நன்கறிவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து