முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்ணுக்கு தெரியாத எதிரி கொரோனா வைரஸை நம் மருத்துவர்கள் வீழ்த்துவார்கள் : பிரதமர் மோடி நம்பிக்கை

திங்கட்கிழமை, 1 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா வைரஸ் ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம், ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் அதனை வீழ்த்துவார்கள் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு நேற்று தொடங்கி உள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். 

அப்போது அவர் பேசுகையில், ‘கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம். ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் வெல்ல முடியாதவர்கள். கண்ணுக்கு தெரியாத எதிரிக்கும், வெல்ல முடியாதவர்களுக்கும் இடையே நடக்கும் போரில் நமது மருத்துவ ஊழியர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்’ என நம்பிக்கை தெரிவித்தார்.

‘வரும் காலங்களில் இந்த பல்கலைக்கழகம் சிறப்பான புதிய உயரங்களை எட்டும் என நம்புகிறேன். உலகளாவிய தொற்றுநோய் மட்டும் இல்லாதிருந்தால், இந்த நாளில் நான் உங்களுடன் பெங்களூருவில் இருக்கவேண்டும் என விரும்பினேன். 

வைரஸ் பரவிய நேரத்தில், உலகமே நம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் விஞ்ஞான சமூகத்தை நம்பிக்கையுடனும் நன்றியுடனும் பார்க்கிறது. உங்களிடமிருந்து கவனிப்பு மற்றும் குணப்படுத்துதல் இரண்டையும் உலகம் எதிர்பார்க்கிறது’ என்று மோடி பேசினார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து