Idhayam Matrimony

நிசர்கா புயல்; போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ள  நிலையில் மேற்கு மாநிலங்களில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை நீண்டகால அடிப்படையில் 107 சதவீதம் என்ற அடிப்படையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது வலுவடைந்து புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு நிசர்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவின் மேற்கு கடற்பகுதியில் உருவாகி உள்ள புயலால் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் நலமுடன் இருக்க பிராதிப்போம். அந்த பகுதி மக்கள் போதிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து