முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய முதலீடுகளை ஈர்க்க ஒளிரும் தமிழ்நாடு மாநாடு : முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்க்க ஒளிரும் தமிழ்நாடு என்ற காணொலி மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

தமிழ் நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று (6.6.2020),  காலை 11 மணி அளவில், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் நடைபெறும், ஒளிரும் தமிழ்நாடு என்ற காணொலி மாநாட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பங்கேற்று தொடங்கி வைத்து, தலைமையுரை ஆற்றுகிறார். அதோடு, தமிழ்நாட்டின் தொழில்வளம் பற்றிய கையேட்டினை முதல்வர் வெளியிடுகிறார். 

இந்த மாநாட்டில், 500-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.   CII தலைவர் ஹரி K. தியாகராஜன், முன்னாள் தலைவர்கள் R. தினேஷ், B. சந்தானம், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணைத்தலைவர்  ப்ரீத்தா ரெட்டி,  சன்மார் குழுமத்தின் துணைத்தலைவர் விஜய் சங்கர், Wheels India நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம், டைம்லர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சத்யகம் ஆர்யா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.  இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்த்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து