முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுச்சூழல் தினம்: மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு மாணவர் ஒரு மரம் திட்டத்தில் சேர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டுக் கடந்த ஆண்டு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ’ஒரு மாணவர் ஒரு மரம்’ திட்டத்தை பள்ளி மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார். இதன்படி ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு மரத்தையாவது நட வேண்டும்.

இதன்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் 10 லட்சம் மரங்களை நட்டு வளர்க்கத் திட்டமிடப்பட்டது. அதேபோல சமக்ர சிக்‌ஷா ஜல் சுரக்‌ஷா திட்டத்தின் கீழ், தண்ணீர் சேமிப்பையும் மாணவர்களிடையே அமைச்சர் வலியுறுத்தினார். அதே போல கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கேந்திர வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கவும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கேட்டுக் கொண்டார். 

 

இந்நிலையில் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில், சர்வதேச சுற்றுச்சூழல் தினமான இன்று(நேற்று), இயற்கையை வளப்படுத்தத் தொடர் முயற்சிகளை விழிப்புணர்வுடன் மேற்கொள்வோம். ஆசிரியர்களும் மாணவர்களும் #OneStudentOneTree மற்றும் #SamagraShikshaJalSuraksha திட்டத்தில் இணைவோம். இயற்கையைக் காப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து