Susant Singh 2020 06 14

Source: provided

மும்பை : கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டார்.

பிரபல இந்தி நடிகரும், மகேந்திர சிங் டோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான டோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவருமான இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான இவர் 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான, காய் போ சே திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பி.கே, ராப்தா, கேதர்நாத் உள்ளிட்ட பல திரைப்படங்களின் நடித்துள்ள இவர் டோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக அறியப்பட்டார்.

பாலிவுட் திரையுலகில் முன்னனி நடிகராக திகழ்ந்த 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புட் பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர் ஆவார். இவரது மரணம் திரையுலக பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலகம் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் சுஷாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சுஷாந்த் ஒரு சிறந்த இளம் நடிகர், நம்மை விட்டு பிரிந்து விட்டார்.

திரையுலகில் அவரது உயர்வு பலருக்கு உத்வேகம் அளித்தது. அவர் மறக்க முடியாத பல தருணங்களை விட்டு சென்றுள்ளார். அவரது மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார். 


அமெரிக்கா - ரஷ்யா இடையே நடக்கும் Cyber War | Ransomware Cyber AttackYAMAHA RX100 Styleல் அசத்தலான எலக்ட்ரிக் பைக்|5 ரூபாய்க்கு 100 கிலோமீட்டர்| Komaki MX3 E-Bike Reviewதாய் பால் கொடுப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க முடியுமா? | Benefits of Mothers Milkஒரு பைசா செலவில்லாமல் ஓடும் மோட்டார் சைக்கிளை தயாரித்த மாணவர்தேனீ வளர்க்க கற்று கொடுத்து 80 பேரை லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வைத்து அசத்தல்எனக்குEmotional Scenesல் நடிக்க ரெம்ப பிடிக்கும் சீமராஜா பட நடிகை அபிநயா | Seema Raja Actress Abhinayaஇள வயதிலேயே இந்தியன் சாம்பியன் டைட்டில் வென்ற கோம்பை நாய் |பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 18Whatsapp Call மூலம் பெண்களை மயக்கி பணம் கேட்டு மிரட்டல்| மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? இதை அவசியம் சாப்பிடுங்க | K.தம்பிதுரை சித்த மருத்துவர்22 கின்னஸ் சாதனைகளை படைத்து அசத்திய தமிழர் | 22 Guinness World Records Title WinnerKanni | வளர்த்தவர் இருந்தால் மட்டுமே குட்டி போடும் பாசமான நாய்| பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 17Tamil General Knowledge Questions and Answers|Brain Games Tamil|Tamil quiz | Interesting GK| Part 01பிச்சை எடுத்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தானம் செய்த பிச்சைக்காரர் |Beggar Donates 50 Lakh Rupeesவேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி? | Job Scams


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து