முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க கடற்படை முன்னாள் அதிகாரிக்கு 16 ஆண்டு சிறை

செவ்வாய்க்கிழமை, 16 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : ர‌ஷ்யாவில் அமெரிக்காவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமெரிக்க கடற்படை முன்னாள் அதிகாரிக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் பால் வீலன் (வயது 50). அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரியான இவர் தனது நண்பரின் திருமணத்திற்காக கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ர‌ஷ்யா சென்றார். அவர் தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த போது போலீசார் அவரை கைது செய்தனர்.

அவர் ர‌ஷ்யாவில் அமெரிக்காவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் பால் வீலன் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்ததோடு தான் நிரபராதி என்றும் வேண்டும் என்று வலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பால் வீலன் மீதான வழக்கு மாஸ்கோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்தது. இதில் பால் வீலன் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி கோர்ட்டு அவரை குற்றவாளியாக அறிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் பால் வீலனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி  தீர்ப்பு வழங்கினார். கோர்ட்டின் இந்த நடவடிக்கையை ர‌ஷ்யாவுக்கான அமெரிக்க தூதர் ஜான் சுல்லிவான் கண்டித்தார்.

ரகசிய விசாரணையில் பால் வீலனுக்கு எதிரான எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த சிறை தண்டனை நீதியை கேலி செய்யும் வகையில் இருப்பதாக கூறிய அவர் பால் வீலனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து