முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவை தடுத்து நிறுத்துவதில் பிரகாசமான வெற்றியை பெற்றுள்ளோம் : பெருமையுடன் கூறும் வடகொரிய அதிபர் கிம்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பியாங்கியாங் : புதிய கொரோனா வைரஸைத் தடுத்து நிறுத்துவதில்  தனது நாடு  பிரகாசமான வெற்றியைப் பெற்றுள்ளது என்று வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் பாராட்டியதாக  அந்நாட்டு அரசுக்கு சொந்தமான  கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் கட்சியின் பொலிட்பியூரோ கூட்டத்தில்  கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி கிம் ஜாங் உன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு,  உலக அளவில்  கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையிலும் கொடிய கொரோனா வைரசை  வடகொரியாவில் கால்பதிக்க விடாமல் தடுத்து விட்டோம் என்று கிம் ஜாங் அன் கூறியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியதும் வடகொரியா தனது எல்லையை மூடியது. சீனாவில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோரைத் தனிமைப்படுத்தியது. மர்ம தேசமாக அறியப்படும் வடகொரியாவில் கொரோனா வைரஸ் அதிக அளவு இருப்பதாக பரவலாக சொல்லப்பட்ட போதிலும் அது பற்றிய எந்த செய்தியும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. தற்போது கிம் ஜாங் உன் உரை, வடகொரியாவில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று கருதும் வகையில் உள்ளது.

இதுநாள் வரை கொரோனா தொற்று பற்றிய எந்த தகவலையும் வடகொரியா வெளியிடாவிட்டாலும், அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.  அண்டை நாடுகளில் இருந்து புதிய தொற்றுக்கள் பரவ வாய்ப்பு உள்ளதால், உச்சபட்ச விழிப்புணர்வுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கிம் ஜாங் உன் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து