முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டனாக ஷோபி நியமனம் : துணை கேப்டனாக ஆமி சதர்த்வைட்

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கிறிஸ்ட் சர்ச் : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முழுநேர கேப்டனாக ஷோபி டெவின் நியமிக்கப்பட்டுள்ளார். 

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஷோபி டெவின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா பீதி காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் களம் காண உள்ளன. அதன் தொடர்ச்சியாக நியூசிலாந்து பெண்கள் அணி விரைவில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. மேலும் 2021 பிப்ரவரியில் ஒருநாள் பெண்கள் உலக கோப்பை போட்டியும் நடைபெற உள்ளது.

எனவே அந்தப் போட்டிகளை கருத்தில் கொண்டு  நியூசிலாந்து பெண்கள் அணிக்கு ஷோபி டெவின்(30) நேற்று முன்தினம் முழுநேரக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் சங்க அறிவிப்பு குறித்து ஷோபி, நியூசிலாந்து அணியின் கேப்டனாக பதவி கிடைப்பது மிகப்பெரிய கவுரவம், பாக்கியம். துணைக் கேப்டன் ஆமியுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறினார். ஷோபி 2006-ம்  ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ஹாக்கி வீராங்கனையாகவும் போட்டிகளில் பங்கேற்ற ஷோபி  டி20 போட்டியில் 18பந்துகளில் அதிவேகமாக அரைசதம் விளாசியவர்(வீரர், வீராங்கனை) என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர். ஆல்ரவுண்டரான ஷோபி 105 ஒருநாள், 91டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 4954ரன் எடுத்ததுடன், 158 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 

நியூசிலாந்து பெண்கள் அணியின் துணை கேப்டனாக ஆமி சதர்த்வைட் நியமிக்கப்பட்டுள்ளார். பிரசவ விடுப்புக்காக சென்ற ஆமிக்கு ஜனவரி மாதம் பெண் குழுந்தை பிறந்தது. மகப்பேறு விடுப்பு முடிந்து விரைவில் அணிக்கு திரும்ப உள்ள ஆமி, சக வீராங்கனையான லீயா தகூகூவை 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து