எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் விடுவிக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் இன்று(நேற்று) முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் விடுத்துள்ள மற்றொரு அறிவிப்பில், திருவண்ணாமலை வடக்கு மற்றும் திருவண்ணாமலை தெற்கு ஆகிய மாவட்ட கழகங்கள் பின்வரும் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்பதையும், மாவட்ட செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
ஆரணி, கலசப்பாக்கம், செய்யார், வந்தவாசி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்திற்கு எம்.எல்.ஏ. தூசி கே. மோகனும், திருவண்ணாமலை, போளூர், கீழ்பென்னாத்தூர், கெங்கம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


