எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (27.7.2020) தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை வழங்கிடும் வகையில் ஜெயராஜின் மகள் பெர்சிஸ்-க்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும் தமிழக முதல்வர் கடந்த 24.6.2020 அன்று உத்தரவிட்டார்.
அதன்படி, உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் ராஜூ கடந்த 26.6.2020 அன்று வழங்கினார். அதனைத் தொடர்ந்து, குடும்பத்தின் வாரிசுதாரரான பெர்சிஸ்-க்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை தமிழக முதல்வர் நேற்று வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், தலைமைச்செயலாளர் சண்முகம், பொதுத்துறை முதன்மைச்செயலாளர் முனைவர் செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி மற்றும் ஜெயராஜ் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |