முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 6, 7-ம் தேதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தென் மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட 6-ம் கட்ட (31-ம் தேதி) ஊரடங்கு முடிவடைந்த நிலையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் 31.8.2020 (ஆகஸ்ட்  31-ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கை மேலும் நீட்டிப்பு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழகத்தில்  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால், தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில்  உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லவுள்ளார்.

வரும் 6-ம் தேதி (வியாழன்கிழமை) மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்யவுள்ளார். குறிப்பாக மதுரை வடபழஞ்சியில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் கூடுதலாக 900 படுக்கைகளுடன் கூடிய அதிநவீன கொரோனா சிகிச்சை மையத்தை அவர் பார்வையிடுகிறார்.

மதுரை வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் ராஜ்சத்யன் உட்பட பலர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

அன்று இரவு மதுரையில் தங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுநாள்  7-ம் தேதி நெல்லை புறப்பட்டு செல்கிறார். அதை தொடர்ந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

ஆய்வு கூட்டத்தின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட  கலெக்டர்களிடம் கேட்டறிய உள்ளார். கொரோனா அதிகம் பரவும் தென்மாவட்டங்களில் முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து