முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெய்ரூட் வெடிவிபத்தால் உருக்குலைந்த லெபனானுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெருசலேம் : லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான நாடு. இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிரியாவுடனும், தெற்கே இஸ்ரேலையும், மேற்கே மத்திய தரைக்கடலையும் எல்லைகளாக கொண்டுள்ளது.லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே போர்களும் நடைபெற்றுள்ளது.

இதனால் இருநாடுகளும் ஒருவரை ஒருவர் எதிரி நாடுகளாகவே கருதுகின்றன. மேலும், லெபனானில் பல ஆண்டுகளாக ஹிஸ்புல்ல்லா பயங்கரவாத அமைப்பு பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மேலும், அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் அரசுக்கு எதிரான சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த காரணங்களால் லெபனான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து வருகிறது. 

இதற்கிடையில், லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 70 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

துறைமுகப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய வெடிபொருட்களால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், வெடிவிபத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு அதன் எதிரிநாடாக கருதப்படும் இஸ்ரேல் உதவ முன்வந்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் அரசு தரப்பில் வெளியிட்டுள்ள தகவலில், லெபனானில் ஏற்பட்டுள்ள வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்க முன்வந்துள்ளோம். 

உடனடியாக அவசரகால உதவிகளை சர்வதேச இடைத்தரகு வழியாக வழங்கவும் இஸ்ரேல் தயாராக உள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, பெய்ரூட் தாக்குதலுக்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் அரசும், ஹிஸ்புல்லா அமைப்பும் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து