சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு கொரோனா பாதிப்பு

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      இந்தியா
Ranjan Gokhale 2020 07 29

Source: provided

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 19 லட்சத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் சமீபத்தில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொட்ர்ந்து அவர் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். 

அயோத்தி ராமர் கோயில் வழக்கில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து