ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய் விடும்: சிவசேனா நம்பிக்கை

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      இந்தியா
Shiv Sena 2020 08 01

Source: provided

மும்பை : ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் என சிவசேனா கூறியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிலையில் ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் என சிவசேனா நம்பிக்கை தெரிவித்து உள்ளது.  இதுகுறித்து சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது-

அயோத்தியில் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுவது போன்ற பொன்னான தருணம் வேறு எதுவும் இருக்க முடியாது. கொரேனா வைரஸ் இருக்கிறது. ஆனால் ராமரின் அருளால் அது மறைந்து விடும். 

கொரோனா வைரஸ் அயோத்தி, உத்தரபிரதேசம் மற்றும் ஒட்டு மொத்த நாட்டிலும் பரவி உள்ளது. ஆனால் இந்த பிரச்சினை கடவுள் ராமரின் அருளால் காணாமல் போய்விடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து