நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது : அயோத்தியில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      இந்தியா
Yogi Adityanath 2020 08 02

Source: provided

அயோத்தி : ராமர் கோவில் கட்டப்படுவதன் மூலம் நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ராமர் கோவிலுக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: 

ராமர் கோவில் கட்டுவதன் மூலம் நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது. ராமர் கோவில் கட்ட 500 ஆண்டுகளாக காத்திருந்தோம். ராமர் கோவில் கட்டுமானப்பணிகளை அறக்கட்டளை இனி  முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்றார்.

இந்த விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ராமர் கோவில் பூமி பூஜை மிகப்பெரிய திருப்தியை கொடுத்துள்ளது. ராமர் கோவிலுக்காக ஏராளமானோர் தியாகம் செய்துள்ளனர். கொரோனா தொற்று நிலையால் பலரை விழாவுக்கு அழைக்க முடியவில்லை என்று கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து