முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 5,684 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதார துறை அறிவிப்பு

வியாழக்கிழமை, 6 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் நேற்று 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 6,272 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.21 லட்சத்தை கடந்தது என்று தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழகத்தில் நேற்று 5,684 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,642 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 42 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 126 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-65) மூலமாக, நேற்று மட்டும் 67,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 30 லட்சத்து 20 ஆயிரத்து 714 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

நேற்று கொரோனா உறுதியானவர்களில், 3,380 பேர் ஆண்கள், 2,304 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,68,889 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,10,228 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 6,272 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 21 ஆயிரத்து 087 ஆக உள்ளது. நேற்று மட்டும் கொரோனா பாதித்த 110 பேர் உயிரிழந்தனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 88 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,571 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,486 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 13 ஆயிரத்து 786 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 325 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 35 ஆயிரத்து 033 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து