முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வியாழக்கிழமை, 6 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டிடப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், மதுரையில் புற்று நோய் சிகிச்சை மையத்துக்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை வடபழஞ்சியில் 900 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மதுரை மாவட்ட கலெக்டர் வினய் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் பற்றி மருத்துவர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.247 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தீவிரமாக கொரோனா தடுப்பு பணி நடைபெற்று வருகிறது. உலக சுகாதார அமைப்பு, ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல்களின்படி கொரோனா பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மதுரையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வீடு வீடாக சோதனை செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதி உள்ளது.அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

மதுரையில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 100 நாட்கள் வேலைத் திட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மதுரையில் 3 தொழிற்பேட்டைகளில் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் பல்வேறு நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடிகள் மதிப்பீட்டில் தொடங்கியுள்ளன. இதுதவிர மதுரையின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், மாவட்ட கலெக்டர் வினய், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் தமிழழகன், திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல் அன்பழகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து